பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்று கோலாகலமாக துவங்குகிறது.
இதில் இந்தியா சார்பில் 117 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று தனது ‛ எக்ஸ்’ தளத்தில் பதிவேற்றியுள்ளதாவது,
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்கள், நீங்கள் ஒவ்வொருவரும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திடுபவர்கள் என தெரிவித்துள்ளார்.