பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில்
பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் ரூ.4.6 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் சிக்கியது. பூங்குணம் அருகே போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின் போது சொகுசு காரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்க நகைகள் 2 பைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவையை சேர்ந்த நகை உற்பத்தியாளர், பண்ருட்டி வழியாக சென்னை நகைக்கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காரில் தங்கத்தை கொண்டுவந்த ஸ்ரீதர், கார்த்திகேயன், கிருஷ்ணன், ஜான் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க நகைகளை வருமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்