இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு! ஏழை, நடுத்தர மக்கள் மீது தாக்குதல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

சென்னை: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு! ஏழை, நடுத்தர மக்கள் மீது தாக்குதல்!! கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை பொழிந்துள்ளது என சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் மோடி அரசு சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளை மட்டும் திருப்திப்படுத்தி, தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சித்துள்ளது.

தமிழகத்திற்கு வரவேண்டிய புயல், மழை வெள்ள நிவாரணம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட இடம்பெறச்செய்யாமல் தமிழக மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றியுள்ளது. அதிகமான வரி வருவாய் அளிக்கும் தமிழ்நாட்டை புறக்கணிப்பதன் மூலம் இந்த நிதிநிலை அறிக்கை கூட்டாட்சி கோட்பாட்டுக்கு துரோகம் இழைக்கிறது. உணவு மானியத்தை சுருக்கி, உர மானியத்தை வெட்டி, விவசாயிகள் மற்றும் வறுமையில் வாடும் கோடானு கோடி மக்களின் வயிற்றிலடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.