பிரம்மதேசத்தில் மகேந்திரன் என்பவர் 10 வயது சிறுமியை
பிரம்மதேசத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரம்மதேசத்தில் மகேந்திரன் என்பவர் 10 வயது சிறுமியை 2020-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா மகேந்திரனுக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.8,000 அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.