பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் அனுமதி பெற்ற பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்.
இந்த நிலையில் முன்தினம் முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதனை தொடர்ந்து மத்திய அரசு புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அனுமதி வழங்கியது. இந்தநிலையில் புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 31ம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசுவார்கள். அடுத்த மாதம் ஆகஸ்டு 2ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது