தமிழ்நாட்டில் 90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம்
தமிழ்நாட்டில் 90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியாததால் கருவிழி பதிவு திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் மானிய விலையில், உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில நேரங்களில் ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படும் குற்றச் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொது விநியோகம் கணினி மயமாக்கப்பட்ட பிறகு, முன்பு இருந்த பேப்பர் குடும்ப அட்டை மாற்றப்பட்டு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. அதே போல பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியாததாலும் அதனால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாலும் தேவையற்ற சிக்கல்கள் உருவாகி வருகிறது. இதனால் விரல் ரேகை மின்னணு பதிவுக்கு பதிலாக கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் முறையை தமிழ்நாடு அரசு தொடங்கி இருந்தது. அதன்படி, தற்போது மிழ்நாட்டில் 90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இது விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்படும் என்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.