இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக இலங்கை அணிக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் நாளை மறுநாள் பல்லேகலேவில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பயிற்சி மேற்கொள்ளும்போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவிற்கு இடது கையில் கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகினார். ஏற்கனவே காயம் காரணமாக துஷ்மந்த சமீரா தொடரிலிருந்து விலகிய நிலையில் நுவான் துஷாராவும் விலகியது இலங்கை அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்துள்ளது.

துஷ்மந்த சமீராவிற்கு பதிலாக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். நுவான் துஷாராவிற்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மதுஷங்கா கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 3வது இடத்தை பிடித்தார்.

புதுப்பிக்கப்பட்ட இலங்கை அணி: சரித் அசலங்கா (c), பாத்தும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மஹீஷ் தீக்ஷன, சமிந்து தீக்ஷன, மத்ஹெஷான், மத்தீஷா , அசித்த பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ

Leave a Reply

Your email address will not be published.