இணையதளம் ‘www.tirumala.org’
திருப்பதி ஏழுமலையான் மற்றும் அதை சார்ந்த கோயில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய கேமராக்கள் வரும் ஆகஸ்ட் 1ம்தேதி ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் அதனை சார்ந்த பிற கோயில்களில் பக்தர்கள் உண்டியல் மூலம் நன்கொடையாக அளித்த கேமராக்கள் ஆகஸ்ட் 1ம்தேதி மாநில அரசின் கொள்முதல் போர்டல் மூலம் மின் ஏலம் விடப்படும்.
இதில் நிக்கான், கேனான், கோடக் மற்றும் பிற கேமராக்கள் உள்ளன. மொத்தம் 10 லாட் பயன்படுத்தப்பட்ட, லேசாக சேதமடைந்த கேமராக்கள் மின் ஏலத்தில் விடப்படும். மேலும் விவரங்களுக்கு திருப்பதியில் உள்ள மார்கெட்டிங் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளவும், அல்லது தேவஸ்தான இணையதளம் ‘www.tirumala.org’ அல்லது மாநில அரசு இணையதளமான ‘www.konugolu.ap.gov.in’ ஆகிய இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது