பசியின்மைக்கு என்ன காரணம்? இதோ ஒரு பட்டியல்

பசித்து உண்ண வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கும் நிலையில் பசியில்லாமல் சாப்பிடுவதால் பல பக்க விளைவுகள் ஏற்படும். எனவே பசி இல்லாததற்கு என்னென்ன காரணங்கள் என்பதை பார்ப்போம்.

மனச்சோர்வு ஏற்பட்டாலோ அல்லது மூளையில் ஹார்மோனை சுரக்கச் சுரக்க செய்யும் திறன் குறைந்தாலோ பசி குறைந்துவிடும் . ஜலதோஷம் இருமல் ஆகிய நோய் இருக்கும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைவதால் பசிக்காது.

வாந்தி, ஒற்றைத் தலைவலி காரணமாகவும் பசி எடுக்காது. வயிறு பிரச்சனை, வாந்தி பேதி பிரச்சனை உள்ளவர்களுக்கும் பசிக்காது. புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பசி மிகவும் குறைவாக இருக்கும்.

ரத்தசோகை இருப்பவர்கள், வயதானவர்கள், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் பசிக்காது. உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் பசிக்க வாய்ப்பு இல்லை.

எனவே பசியின்மை என்பதை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.