கொசுவர்த்தி பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனை வருமா?

கொசு கடித்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும் என்பதால்தான் கொசுவர்த்தி ஏற்றப்பட்டு வரும் நிலையில் கொசுவர்த்தியால் பல்வேறு பிரச்சனைகள் வரும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொசுவர்த்தி ஏற்றப்படுவதால் மனித உடலில் இருக்கும் நுரையீரல் பாதிக்கப்படும் என்றும் மூச்சு குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் கொசுவத்தி கலந்த காற்று மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்கு செல்லும்போது நுரையீரல் பகுதிகளில் மென்மையான தசை கொண்ட பகுதிகளை பாதிக்கும் என்றும் இதனை அடுத்து நுரையீரல் மட்டுமின்றி இதயத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

செயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கொசுவர்த்தியில் இருந்து வெளிவரும் புகையை சுவாசிப்பதால் நுரையீரல் உள்பட பல்வேறு பிரச்சனைகள் வரும். எனவே இயற்கையான முறையில் கொசுவை விரட்டுவதற்கு தேவையான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கொசுவத்தியை ஏற்றி வைத்து வீட்டின் கதவை அடைத்து விடுவதால் புகை அறை முழுவதும் சுற்றியே இருக்கும் என்றும் அந்த காற்றை சுவாசிக்கும் போது அதிக நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.