குப்பைக் கிடங்கில் இன்று காலை தீப்பற்றி
பள்ளிக்கரணை மயிலே பாலாஜி நகர் அருகே உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் இன்று காலை தீப்பற்றி எரிந்துள்ளது. தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பள்ளிக்கரணை போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.