கனமழையால் மும்பையில் பல இடங்களில் வெள்ளம்

கனமழையால் மும்பையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பை: மராட்டியத்தில் மும்பை உள்பட நகரங்களில் கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மும்பை அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. மும்பை கலீனா, செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

மும்பை நகருக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி கனமழை காரணமாக நிரம்பியது. கனமழை காரணமாக புனே கதக்வஸ்லா அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மும்பையில் கனமழை பெய்து வருவதால் மித்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விஹார் ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீர் சாலையில் வழிந்தோடுகிறது. புனே புறநகர் பகுதியில் உள்ள அதர்வாடி கிராமத்தில் மழையால் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம் அடைந்தார். பால்கர் மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.