ஏழை மாணவர்களின் போர் குணத்துக்கு

ஏழை மாணவர்களின் போர் குணத்துக்கு தலைவணங்குவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை சார்பில் பரிசளித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய சூர்யா வசதியான ஓரிடத்திலிருந்து நங்கள் செய்யும் சாதனையை விட எந்த வசதியும் இல்லாமல் எதிர்நீச்சல் போட்டு 18 வயதில் நீங்கள் செய்திருக்கும் இந்த சாதனை அளப்பரியது என்று கூறினார்.

அகரம் அறக்கட்டளை தற்போது வரை 6 ஆயிரம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளதாக கூறிய சூர்யா ஒருவருக்கு வழிகாட்டுவது மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்றார். தற்போது இருக்கும் பிரச்சனையை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டு வாழுங்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்திய நடிகர் சூர்யா அகரம் உங்களுடைய பொறுப்பு ஒரு கோடி தேர் இழுப்போம் என்றார். முன்னதாக அகரம் அறக்கட்டளையில் பயின்ற மணிப்பூரை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கள் மாநிலத்தில் நடந்துவரும் பிரச்சனைகள் குறித்து கண்ணீர் மல்க பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.