இந்திய கம்யூனிஸ்ட் நாளை ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. நாளை காலை 10 மணிக்கு அண்ணாசாலை மத்திய தபால் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.