ஆர்.என்.ரவி அறிக்கை அளிக்க
தனியார் பொறியியல் கல்லூரிகள் போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். நடப்பு கல்வியாண்டில் 500 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முறைகேடாக பதிவு செய்துள்ளனர். 2022-23-ல் 211 பேராசிரியர்கள் முறைகேடாக பதிவு செய்ததாக புகார் எழுந்தநிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.