அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு முன்னாள்

அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும் ஒரு குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்று டொனால்டு ட்ரம்பை துணை அதிபர் கமலா ஹாரீஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிபர் வேட்பாளருக்கான ஆதரவை ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு வழங்கி உள்ளனர். இந்த நிலையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தை விஸ்கான் மாகாணத்தில் மேற்கொண்டார். 3,000த்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கூடியிருந்த மைதானத்தில் பேசிய கமலா ஹாரீஸ், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் ஒரு குற்றவாளி என்று குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும் ஒரு குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

துப்பாக்கி கட்டுப்பாடு, கருக்கலைப்பு சிகிச்சைகளை எளிமையக அணுகுதல், ஏழை குழந்தைகள் மறுவாழ்வு, அனைவருக்குமான மருத்துவ சேவைகள் போன்றவற்றிற்கும் முன்னுரிமை அளித்து கமலா ஹாரீஸ் பேசினார். அவரது பேச்சிற்கு மக்கள் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர். கமலா ஹாரிஸுக்கு பதில் அளிக்கும் விதமாக வடக்கு கரோலினா பரப்புரையில் பேசிய ட்ரம்ப், 2 கோடி வெளிநாட்டினர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைய கமலா ஹாரீஸ் அனுமதித்ததாக குற்றம் சாட்டினார். இதனிடையே ட்ரம்பை விட கமலா ஹாரீஸுக்கு ஆதரவு அதிகரித்து இருப்பது தனியார் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.