இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி
தொழில் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் பெரிய அளவில் வெளியாகாத நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 589 புள்ளிகள் சரிந்து, 79,912 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்ட் 189 புள்ளிகள் சரிந்து, 24,319 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.