அம்மா உணவக திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அம்மா உணவக திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்: திமுக பாராட்டு

பேதம் பார்க்கும் பண்பு எப்போதும் இல்லை
திராவிட நாயகர் ஆட்சியை குறைகூறி எதிர்க்கட்சித் தலைவர் சில செய்திகளை கூறி ஏமாற்றி வருகிறார் எனவும் அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக அரசு மேலும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது எனவும் திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வெளியான அறிக்கையில்; “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அ.தி.மு.க ஆட்சியின் திட்டங்களை மேலும் சிறப்பாகச் செயல்படுத்துகிறது ! பேதம் பார்க்கும் பண்பு தி.மு.க-விடம் எப்பொழுதும் இல்லை !தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவு திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்துகிறார் !தி.மு.க. ஆட்சியைக் குறைகூறி “ஏமாற்றாதே ஏமாற்றாதே! ஏமாறாதே ஏமாறாதே!” எம்.ஜி.ஆர் பாடலையே நினைவுபடுத்துகிறோம்!தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் ஆட்சியைக் குறைகூறிச் சில செய்திகளைச் சொல்லி வருகிறார்.

அதிலும், அ.தி.மு.க. நிறைவேற்றிய திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியின் திட்டத்தை மூடிவிட்டது, என்றெல்லாம் குறை சொல்லியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அம்மா உணவுத் திட்டம் குறித்துக் கூறியுள்ளார். மக்களுக்கு
உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகச் சில விளக்கங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

2021 தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால், அம்மா உணவு திட்டத்தை உடனே மூடிவிடுவார்கள் என்று கூறினார்கள். சொல்லியதுபோல் அத்திட்டம் மூடப்படவில்லை. கடந்த மூன்றாண்டுகளில் திராவிட நாயகரின் தி.மு.க. ஆட்சி, அம்மா உணவுத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 19.7.2024 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள “அம்மா உணவகத்திற்கு” நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் , அங்குச் சமைக்கப்பட்டிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டு உணவுப் பொருள்கள் குறித்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அம்மா உணவகங்களில் சிதைந்த உணவு பாத்திரங்களுக்குப் பதிலாகப் புதிய பாத்திரங்கள் வாங்கிடவும், அம்மா உணவகங்ளுக்குத் தேவையான பணிகளுக்காகவும் உடனடியாக ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டம் என்பதற்காக எந்த ஒரு திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திடவில்லை. மாறாக, கூடுதல் நிதி ஒதுக்கிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள்.

எந்த ஒரு திட்டத்தையும் இது யார் கொண்டு வந்த திட்டம், எந்தக் கட்சி கொண்டு வந்த திட்டம்? என்று பார்ப்பது தி.மு.க-விடம் இல்லை. எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் அது திட்டத்தை மேலும் சிறப்புடன் நிறைவேற்றுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது தி.மு.க. அரசு என கூறியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.