வங்கதேச வன்முறையால் இந்தியாவுக்கு
வங்கதேச வன்முறையால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் 31 பேர் சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. வங்கதேசத்தில் மருத்துவம் படித்து வந்த 31 பேரை அங்கு வெடித்த வன்முறையால் கல்லூரி நிர்வாகம் இந்திய எல்லையில் இறக்கிவிட்டது. எல்லையை கடந்து மேற்கு வங்க மாநிலம் ஹில்லியில் மாணவர்கள் தவித்து வந்த நிலையில் 31 மாணவர்களையும் சொந்த ஊர் அழைத்து வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.