மேட்டூர் அணையின் நீர்மட்டம்
காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை தாண்டியது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 7 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 64,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் 37.எம்.சி. தண்ணீர் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேட்டூர் அணைக்கு 6 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது.