45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி வாழ்த்துக்கள்!
🌎💢♨️சென்னை 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக இளைஞரணி. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
கழக கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச்சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.✳️✳️