வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் வங்கதேச அரசு ராணுவ வீரர்களை குவித்தது. வங்கதேசத்தில் தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும் அதை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.