தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிவு
தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை வெளியேற்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொழிற்சாலையில் எந்த பணிகளும் நடக்கக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டார். அமோனியா வாயு கசிந்த நிலையில், ஊழியர்கள் வழக்கம்போல இன்றும் பணிக்குச் சென்றதால் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அமோனியா கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 29 பெண்கள், ஒரு தீயணைப்பு வீரர் உள்பட 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமோனியா வாயு கசிவு நடந்த ஆலையில் மாசுக் கட்டுப்பாடு வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்✳️✳️