சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
.
இன்று நள்ளிரவு 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(எண்.06183) சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு நாளை(20ம் தேதி) சனிக்கிழமை காலை 11.20 மணிக்கு நெல்லை வந்து சேருகிறது.மொத்தம் 18 பெட்டிகள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மறுமார்க்கத்தில் இயக்கப்பட மாட்டாது என ரயில்வே தெரிவித்துள்ளது.