ஒசூர் மாநகராட்சி ஹார்டுவர்டு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது
கிருஷ்ணகிரி ஒசூர் மாநகராட்சி ஹார்டுவர்டு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஒசூர் மாநகராட்சி பாகலூர் – ஒசூர் தாலூகா அலுவலக சாலையில், ஏராளமான எலக்ட்ரிக், துணிக்கடைகள், ஹார்டுவர்ட்ஸ் கடைகள் செயல்பட்டு வருகிறது. கீழ் தளத்தில் ஹார்டுவர்ட்ஸ் கடையாகவும், மேல் தளத்தில் ஹார்டுவர்ட்ஸ் கடையின் பிளாஸ்டிக், கயிறு, இரும்பு உள்ளிட்டவைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள குடோனாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மாடியின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் ஹார்டுவர்ட்ஸ் கடையின் குடோனில் திடீர் என தீப்பற்றி எரிந்தது.