இலவச மருத்துவ முகாம்!
இலவச மருத்துவ முகாம்!
ஜூலை 20.
சென்னை போரூர் ராமகிருஷ்ணா நகரில் கிராமப்புற கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு
ஸ்ரீ சிவ வீர ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளித்தனர். மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு
நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
கிராமப்புற கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பாக மக்கள் தொடர்பாளர் எஸ்.சாந்தினி அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து, இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தனது அன்பினை பகிர்ந்து கொண்டார்.
செய்தி ராஜா
தமிழ்மலர்.