தினம் ஒரு சிந்தனை
அன்பை ஒருபோதும்
கடனாகக் கொடுக்காதீர்கள்…
திரும்ப கிடைக்காதபோது
வலிகளைத் தாங்க முடியாது.!!
வீட்டு வைத்தியம்
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறே, தேவையான அளவு தண்ணீரைக் குடிப்பது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
நாளும் ஒரு செய்தி
ஆட்டுப்பாலில் கொழுப்புச்சத்து மிக மிகக் குறைவாக உள்ளது.
சமையல் குறிப்பு
உருளைக் கிழங்கு மற்றும் வாழைக்காய் வறுவல் செய்து இறக்கும்போது கடைசியாக இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.
பொன்மொழி
கடவுளின் படைப்பின் மூலம் நாம் அடைந்த எல்லாவற்றிற்கும் நன்றி கூற வேண்டும்.
-இயேசு கிறிஸ்து