ரயில்வேயில் வேலை: அறிவிப்பாணை வெளியானது

இந்திய ரயில்வேயின் (மத்திய) பிரிவு 2,424 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்கீழ், பல்வேறு பணிகளுக்கு அப்ரென்டிஸ் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியும், வயது வரம்பு 15-24 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SC-ST பிரிவினருக்கு 5 ஆண்டு, OBC பிரிவினருக்கு 3 ஆண்டு சலுகை உண்டு.

rrccr.com
இணையதளத்தில் ஆகஸ்ட் 15வரை விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே எந்தெந்த இடங்களுக்கு ஆள் எடுக்கிறது?

பிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், லேபரெட்டரி அசிஸ்டென்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ப்ரோக்ராம் அசிஸ்டென்ட், ப்ரோக்ராமிங் அண்ட் சிஸ்டம் அட்மினிஸ்டிரேஷன் அசிஸ்டென்ட், மெக்கானிக் மெஷின் டூல்ஸ் மெயின்டனன்ஸ் இடங்களுக்கு அப்ரண்டிஸ் முறையில் ஆட்களை மத்திய ரயில்வே தேர்வு செய்கிறது.

தேர்வானோர் மும்பை, புனே, நாக்பூர், சோலாப்பூரில் பணியமர்த்தப்படுவர்.

‌இந்திய ரயில்வேயின் (மத்திய) பிரிவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 2,424 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

என்ற இணையதளம் செல்ல வேண்டும்.

பிறகு அங்குள்ள ‘Click here to Apply Online என்பதை அழுத்த வேண்டும்.

ஏற்கெனவே இருக்கும் Registration ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்து விவரங்களை ஆவணங்களுடன் ₹100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.