புதினிடம் இந்தியா அறிவுறுத்த வேண்டும்: அமெரிக்கா
உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோத போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா உடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பேசிய அந்நாட்டு செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர், ஐ.நா. சாசனம், உக்ரைனின் பிராந்திய ஒற்றுமை, இறையாண்மை, மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் இந்தியா அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.