ஒரே வாரத்தில் இருமடங்கு உயர்ந்த தக்காளி விலை
தமிழகத்தில் ஒரே வாரத்தில் இருமடங்கு அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ₹40க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ₹90ஆக விலை உயர்ந்துள்ளது.
நேற்று சென்னையில் கிலோ ₹80க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ₹10 உயர்ந்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தக்காளி அளவு குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.