15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை
2 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபா, ரவிக்குமார், துரைராஜ், அருண், மகேஷ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். 2019இல் திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். அந்த வழக்கில் கைதான 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை, தலா ரூ.37,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.