தமிழ்நாட்டின் தாயுமானவர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்

காலை உணவு திட்டம் மூலம் ஒட்டுமொத்தமாக 34,987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகிறார்கள். 22 லட்சம் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி, அவர்களின் பெற்றோர்களுக்கு மன நிறைவை தந்துள்ள தமிழ்நாட்டின் தாயுமானவர் மு.க.ஸ்டாலின் அவர்களை வணங்குகின்றோம்.

இத்திட்டம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் தெரிவித்ததை இங்கே மீண்டும் பதிவு செய்கின்றேன்.
இந்த மகத்தான திட்டத்திற்கு “மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்” எனும் பெயர் சூட்ட வேண்டும். கடல் தாண்டி உலகம் முழுக்க இத்திட்டம் பரவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.