அஞ்சல்துறையில் 44,228 காலிப்பணியிடங்களை
அஞ்சல்துறையில் 44,228 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகன அறிவிப்பு வெளியீடு
அஞ்சல்துறையில் உள்ள 44,228 கிராம அஞ்சல் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகன அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராம அஞ்சல் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமாக படித்திருக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கட்டாயமாக உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். ஒன்றிய அரசு பணியாக இருந்தாலும் அஞ்சல் துறை சாராத அமைப்பின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.