தீங்கு விளைவிக்க கூடிய 26.910 கிலோ கிராம் புகையிலை விற்பனை
நெல்லை
திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மாவடி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த கீழ உப்புரணி, மேலத் தெருவை சேர்ந்த ராமராஜன் (32) என்பவரை சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 26.910 கிலோ கிராம் புகையிலை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. திருக்குறுங்குடி காவல் நிலையம் அழைத்து வந்தார். இதுகுறித்து ஏர்வாடி வட்ட காவல் ஆய்வாளர் திரு. தர்மராஜ் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராமராஜனை கைது செய்தனர்..