எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம்
நீட் தேர்வு தொடர்பாக எழுதியிருந்த கடிதத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம்
பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது.
இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதி வாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது
தங்களின் கடிதத்திற்கு நன்றி
என ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்.
நீட் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் எனவும், இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்