அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா ஒட்டி மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர், புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.