ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவில் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரவில் துப்பாக்கியுடன் ரோந்து பணி மேற்கொள்கின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சம் இன்றி சென்றுவர ஏதுவாக போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி போலீசார் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெரும்பாலான போலீசார் இரவு ரோந்துப்பணியின்போது துப்பாக்கியுடன் பணிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில். `கிரிமினல் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் துப்பாக்கி ஏந்தியபடி கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக தற்காப்புக்காகவும் இதனை பயன்படுத்துகிறோம்’ என தெரிவித்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு வாலாஜா பஸ் நிலையம், சுங்கச்சாவடி உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.