ரயில் நிலையம்

ரயில் நிலையம்: பெரும்பாலான ரயில் நிலையங்களுக்கு ஜங்ஷன் என்றே பெயர் இருக்கும். உதாரணத்திற்கு திருநெல்வேலி சந்திப்பு, திருச்சி சந்திப்பு, மதுரை சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு என ரயில் நிலையங்களுக்கு பெயர் இருக்கும். அதேபோல சில ரயில் நிலையங்களுக்கு டெர்மினஸ் அல்லது டெர்மினல்ஸ் என்று இருக்கும்.

இதேபோல், மேலும் சில ரயில் நிலையங்கள் சென்ட்ரல் என்று முடிவடையும். உதாரணத்திற்கு சென்னை சென்ட்ரலை சொல்லலாம்.. இப்படி ஏன் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கு பெயர்கள் மாற்றமாக இருக்கிறது என்று யோசனை செய்துள்ளீர்களா?.. அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

செண்ட்ரல்:
நகரின் மிகவும் பழமையான, பிசியான ஸ்டேஷனுக்கு சென்ட்ரல் என்ற பெயர் இருக்கும். நகரின் மிக முக்கியமான ரயில் நிலையமாக இது இருக்கும். மிகப்பெரியதாக இருப்பதோடு, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கிட்டத்தட்ட இங்கிருந்து ரயில் கிளம்பும் அளவுக்கு ஏராளமான ரயில்கள் இங்கிருந்து புறப்படும். எடுத்துக்காட்டாக மும்பை சென்ட்ரல் ((BCT), கான்பூர் செண்ட்ரல் (சிஎன்பி), சென்னை சென்ட்ரல் (MAS), மங்களூர் சென்ட்ரல் (MAQ), திருவனந்தபுரம் செண்ட்ரல் (TVC) என நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையங்கள் செண்ட்ரல் என அழைக்கப்படுகின்றன.

டெர்மினஸ்:
ரயில் பாதை முடிவடையும் நிலையத்தை டெர்மினஸ் அல்லது டெர்மினல் என்று அழைப்பர். டெர்மினல் என்றால் முற்றுப்புள்ளி என்று அர்த்தம். இந்த நிலையத்திற்குள் உள்ளே வரும் ரெயில்கள் ஸ்டாப் பிளாக்குகளில் நின்று விடும், அங்கிருந்து வேறு எங்கும் செல்லாது. சத்ரபதி சிவாஜி டெர்மினல், விக்டோரியா டெர்மினல் மற்றும் லோகமான்ய திலக் டெர்மினல் ஆகியவை நாட்டின் மிகப்பெரிய டெர்மினல் ரெயில் நிலையங்கள் ஆகும். பாந்திரா டெர்மினல், ஹவுரா டெர்மினல், பாவ்நகர் டெர்மினல், கொச்சி ஹார்பர் டெர்மினல் போன்றவை டெர்மினல் ரயில் நிலையங்களை உதாரணத்திற்கு சொல்லலாம்.

ஜங்ஷன்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரயில் பாதைகள் ஒன்றாக சேருகிற அல்லது பிரிகிற இடத்தை ஜங்ஷன்(சந்திப்பு) என்று அழைப்பர். இங்கு ஒரே நேரத்தில் ரயில்கள் நுழைவதும் வெளியே செல்வதுமாக இருக்கும். இந்த நிலையம் குறைந்தபட்சம் 3 ரெயில் பாதைகளை கொண்டு இருக்கும். திருநெல்வேலி சந்திப்பு, மதுரை சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு , விருதுநகர் சந்திப்பு ஆகியன சந்திப்பு ரயில் நிலையங்களை இதற்கு உதாரணங்களாக சொல்ல முடியும்.

Leave a Reply

Your email address will not be published.