காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு
தமிழகத்திற்கு நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் சென்றடையும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பது அவசியம் என பரிந்துரை செய்தது