அனிபால் கென்னடி அவர்கள் ஆய்வு
வாணரப்பேட்டை சீனுவாசப் படையாட்சி வீதி குறுக்கு வீதியில் வாய்க்கால் சீரமைக்கும் பணியினை உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் ஆய்வு :
புதுச்சேரி உப்பளம் தொகுதி, தமிழ்த்தாய் நகரில் சீனுவாசப் படையாட்சி வீதி, மற்றும் குறுக்கு வீதிகளுக்கு வாய்க்கால் மற்றும் தார்சாலை அமைத்தல் ஆகியப் பணிகளுக்கான பூமி பூஜையினை உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் மார்ச் மாதம் தலைமைத் தாங்கி துவங்கி வைத்தார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பணிகள் நடை பெறாமல் இருந்தது. தற்பொழுது பணி துவங்கியது அப்பணிகளை சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தனது கழக சகோதரர்களுடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவிப் பொறியாளர் யுவராஜ் , இளநிலைப் பொறியாளர்கள் சண்முகம், பரமானந்தம், மற்றும் தொகுதி செயலாளர் சக்திவேல், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், தொ.மு.ச. துணை அமைப்பாளர் மிஷேல், கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடனிருந்தார்கள்.