மெரினா கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த
மெரினா கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த போது அலையில் சிக்கிய 2 சிறுவர்களை மெரினா மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் பேசின்பிரிஜ் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலையில் சிக்கினர். இதனால் அவர்கள் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக கடலுக்கு சென்ற மெரினா மீட்பு குழுவினர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.சிறுது நேர போராட்டத்துக்கு பின் சிறுவர்களை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.