பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மாற்றம்
டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலியால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது. தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணி தேர்வுக் குழுவில் இருந்த முன்னாள் வீரர்கள் வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் வீரர்கள் வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக் நீக்கத்துக்கான காரணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறவில்லை. முன்னாள் வீரர்கள் முகமது யூசுப், ஆசாத் ஷபிக் ஆகியோர் தேர்வாளர்களாக தொடருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.