பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டி
பள்ளி மாணவர்களுக்கு, தமிழ் கையெழுத்துப் போட்டி நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியை அழகாக எழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், ஜூலை 31ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் போட்டிகளை நடத்தி முடிக்க, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்