ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர்!
ஆஸ்திரியா உருவாக காரணமாக இருந்த இந்திய முன்னாள் பிரதமர் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்ந்து பேசிய ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர்!
அரசுமுறை பயணமாக ஆஸ்திரியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி உடன் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய அந்நாட்டு அதிபர் கார்ல் நெஹாம்மர் நேருவை நினைவுகூர்ந்து பேசினார்
2-ம் உலகப் போரில் வெற்றி பெற்ற வல்லரசுகளின் ஆக்கிரமிப்புகளுக்கு பின்னர், 1950-களின் தொடக்கத்தில் இறையாண்மை மிக்க ஆஸ்திரியா உருவாவதற்கு முக்கிய பங்காற்றியவர் முன்னாள் பிரதமர் நேரு
சோவியத் ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் இருந்த தனது நடுநிலையான செல்வாக்கு மூலம் பேச்சுவார்த்தை நடத்தி ஆஸ்திரியா உருவாவதற்கு நேரு உதவினார்
உலக அளவில் நேருவின் மிகத் தீவிரமான ஆதரவாளராக இருந்த டாக்டர் பிருனோ கிரைஸ்கி, 1970 – 1983 வரை ஆஸ்திரியாவின் அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது