தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது.
இதற்காக, ₹100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
