விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார்.
1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.
276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிலினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
பதற்றமான வாக்கு சாவடி 45 உள்ளதால் அங்கு பணி புரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள்,தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.