திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி
உப்பளம் தொகுதி அப்துல் கலாம் குடியிருப்பில் புனரமைப்பு பணிகளை உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் :
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு தொகுப்பில் வகை-1ல் உள்ள குடியிருப்புகளின் கதவுகள், ஜன்னல், டைல்ஸ், மாற்றுதல், வண்ணம் பூசுதல் உட்பட்ட பராமரிப்பு பணிகள் ரூபாய் 47.40 இலட்சம் மதிப்பீட்டில் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில் பூமி பூஜை செய்து தொடங்கப்பட்டது. அப்பணி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதனை நேரில் சென்று உதவி பொறியாளர் பார்த்தசாரதி , இளநிலை பொறியாளர் ராமன் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கழிவு நீர் வெளியேற்றுதலை பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணிக்கு ரூபாய் 37.0000 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடை பெற்று முடிந்தது அதையும் பார்வையிட்டார். குடியிருப்பில் உள்ள வகை-I, வகை-II மற்றும் வகை-III பிளாக்குகளுக்கு தற்போதுள்ள 1.5HP மோனோ பிளாக் பம்ப் செட்களை 15 லட்சம் செலவில் மாற்றுதல் ஆகிய பணிகளை நிர்வாகிகள் மற்றும் கழக சகோதரர்கள் உடன் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் சக்தி, இருதயராஜ், ராகேஷ் சகோதரர் சகாயம் ஆகியோர் உடன் இருந்தனர்.