ஓவியக் கண்காட்சியில் இந்தியா சார்பில் அப்சனா ஷர்மீன் இஷாக்,
108 நாடுகளைச் சேர்ந்த பெண் ஓவியர்களின் படைப்புகளில் இடம் பெற்ற ஒரே இந்தியரான சென்னை பொறியாளர்..
முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
துபாயில் யுனெஸ்கோவின் ஒருங்கிணைப்புடன் ஜீ ஆர்ட்ஸ் அமைப்பு நடத்திய பெண்களுக்கான ஓவியக் கண்காட்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஒரே ஒவியரான அப்சனா ஷர்மீன் இஷாக்,
Inclusive inspiration என்ற தலைப்பில் அடக்குமுறை, அத்துமீறல்களுக்கு உள்ளான பெண்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தினார். இதற்குப் பாராட்டிப் பரிசு வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின், அடக்குமுறை மற்றும் பாலியல் அத்துமீறல் ஆகியவற்றில் பாதிக்கப்படும் பெண்கள் பொது வெளியில் சிரித்தாலும் அவர்கள் உள்ளுக்குள் அழுவதை காட்சிப்படுத்தும் விதமாக 9 உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண்களின் கண்களை வரைந்திருந்தேன்.
இதற்கு கண்காட்சியில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. இன்று முதலமைச்சரை சந்தித்தகை என்னால் நம்ப முடியவில்லை, வாழ்த்துக்களை கூறிய முதலமைச்சர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்தினார். இதை என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்