ஒரு வார காலத்தில் மஞ்சள் விலை
ஈரோடு: ஒரு வார காலத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது. உள்ளூர் சந்தையில் நுகர்வு குறைந்ததாலும் ஏற்றுமதி சரிவடைந்ததாலும் மஞ்சள் விலை குறைந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக சராசரியாக குவிண்டால் ரூ.17,000-க்கு விற்பனையாகி வந்தது. உள்நாட்டு சந்தையில் தேவை குறைந்ததாலும், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி 20% குறைவாக இருப்பதாலும் விலை சரிந்துள்ளது.