ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளின் வெற்றியாளருக்கு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும் தென்மாத்தூர் கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்று, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், வங்கியின் மூலம் கடனுதவி வழங்குவதற்கான மனுக்கள் பெறும் முகாம் ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.